ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து
மலை ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.;
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் நீலகிரி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மலை ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரெயில் சேவை நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.