ஊட்டி கோல்டன் ஏரோஸ் அணி வெற்றி
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் ஊட்டி கோல்டன் ஏரோஸ் அணி வெற்றி பெற்றது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கால்பந்து லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் ஊட்டி கோல்டன் ஏரோஸ் அணியும், காஸ்மோஸ் அணியும் மோதியது. முடிவில் கோல்டன் ஏரோஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் காஸ்மோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற கோல்டன் ஏரோஸ் அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் ஊட்டி ஹார்வெஸ்டர்ஸ் அணி மற்றும் மஹாகனி அணி விளையாட இருந்த போட்டியும், மாலை 3 மணிக்கு லெவன் ஸ்டார், நீலகிரி பைசன் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டியும் ரத்து செய்யப்பட்டது.