தமிழகத்தில் தான் ஆவின் பால் விலை குறைவு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆவின் பால் விலை குறைவு என்று கோவையில் அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.

Update: 2023-07-13 19:30 GMT

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆவின் பால் விலை குறைவு என்று கோவையில் அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.


பால் கொள்முதல்


கோவையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


பால் சார்ந்த பொருட்களின் தேவை தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகச்சந்தைகளில் அதிகமாக உள்ளது. வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வ நடவடிக் கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதன்மூலம் தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க முடியும். கிராமப் புறத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை பொறுத்த வரையில் அனைத்து சீசனிலும் ஒரே சீரான விலையை வழங்கி வருகிறோம். இதனால் இளைஞர்கள் கூட பால் உற்பத்தியா ளர்களாக மாறுவதை பார்க்க முடிகிறது.


விலை உயர்வு


கோவை மாநகராட்சியில் பல்வேறு ஆவின் பூத்துகள் அகற்றப்பட் டது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலந்து ஆலோ சித்து மக்கள் அதிகம் கூடுகிற இடங்களில் ஆவின் பூத்துகள் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.யால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பால் கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கேட்டு வருகிறார்கள். இது முதல்- அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.


இடைத்தரகர்கள் கிடையாது


இந்திய சந்தைகளில் தமிழகத்தில் தான் ஆவின் பால் விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளது. பால் வினியோகஸ்தர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்படுவது இல்லை. ஆவினை பொறுத்தவரை டீலர்களாக இருந்தாலும் நிர்ணயிக் கப்பட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யக்கூடாது.


ஆவினில் இடைத்தரகர்கள் எங்கும் கிடையாது. ஆவின் நெய் கள்ள சந்தைகளுக்கு போவதற்கு வாய்ப்பில்லை. ஆவினில் விலை குறைவு என்பதால் தேவைகள் அதிகமாக உள்ளது.


70 லட்சம் லிட்டர்


கோவை மாவட்டத்தில் பால் கொள்முதலை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியாரிடம் பால் வழங்கு வது விவசாயிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. விவசாயிகள் பாலை ஆவினுக்கு கொடுப்பது நல்லது. 50 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறன் நம்மிடம் உள்ளது. அதை 70 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம்.


கலப்படம் செய்த தனியார் பால் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப் பட்டு உள்ளது. ஏதேனும் புகார்கள் இருந்தால் ஆவின் அலுவலர் கள், மாவட்ட கலெக்டர், உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளிக்கலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்