இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரசால் மட்டுமே தர முடியும்

இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரசால் மட்டுமே தர முடியும் என முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் கூறினார்.

Update: 2022-08-20 18:03 GMT

இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரசால் மட்டுமே தர முடியும் என முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் கூறினார்.

ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார். இதில் முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

ரூ.36 ஆயிரம் கோடி

ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த தேர்தலில் ரூ.36 ஆயிரம் கோடி பாரதீய ஜனதா கட்சி சார்பில் செலவு செய்யப்பட்டு நரேந்திரமோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ரூ.36 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது.இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரசால் மட்டுமே தர முடியும். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல்காந்தி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.இதில் கட்சியின் இலக்கிய அணி மாநில பொதுச் செயலாளர் கவிஞர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜம்புகென்னடி, மூங்கில் ராமலிங்கம், வட்டார தலைவர்கள் ராஜா, அன்பழகன், நகர பொது செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொறையாறு

பொறையாறு ராஜீவ்புரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜீவ்காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நவாஸ், தொழிற்சங்க தலைவர் ராமச்சந்திரன், நகர தலைவர் சம்பந்தம், பொது செயலாளர் ரவிக்குமார், வட்டார தலைவர்கள் வேணுகோபால், ராஜேந்திரன், சீனிவாசன் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்