"ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது" குஷ்பு பேச்சு

"ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது" பாஜக ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசினார்.

Update: 2023-03-10 12:16 GMT

சென்னை,

நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள் மீது திமுக அரசு மீது பொய் வழக்குகள் போடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். தொடர்ந்து திமுக அரசை கண்டித்து இன்று வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதன்படி, மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த போராட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, "ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது" என்றார். முன்னதாக கூட்டத்தின் போது பாஜக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை, சென்னை மத்திய மாவட்ட தலைவர் விமர்சிக்க முயன்றதால் சிறிது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்ட மேடையிலேயே மைக்கை பிடுங்கி கரு.நாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்