அரசு ஊழியர்களுக்கு 10 % மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல: டிடிவி தினகரன்

கடலுக்குள் பேனா வைக்க தி.மு.க அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?” என்று பதிவிட்டுள்ளார்.

Update: 2022-10-15 07:36 GMT

சென்னை,

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3½ லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு 10 % மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை தி.மு.க அரசு எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. கடலுக்குள் பேனா வைக்க தி.மு.க அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்