ஆன்லைன் ரம்மி: ரூ.15 லட்சம் இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை...!

தருமபுரியில் ஆன்லைன் ரம்மியில் ரூ. 15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Update: 2022-07-28 06:01 GMT

தருமபுரி,

எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்ற அறியாமையில் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் இதுவரைக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிலும், ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 லட்சத்தை இழந்த கோவை போலீஸ்காரர் காளிமுத்து கடந்த 15-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தகைய ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ. 15 லட்சத்தை இழந்த பிரபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்