"ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் பலர் தவறான வழிக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-10 10:24 GMT

சென்னை,

ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறி வருகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழ் மாநில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-

"ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல குடும்பங்கள் பாழாகியிருக்கின்றன. இளைஞர்கள் பலர் தவறான வழிக்கு தள்ளப்பட்டுள்ளனர், பல உயிர்கள் மாய்க்கப்பட்டுள்ளன. உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும்.

ஆன்லைன் ரம்மிக்கு மூடுவிழா நடத்தக்கூடிய நிலையை, அரசு அவசியமாக, அவசரமாக ஏற்படுத்த வேண்டும். இதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்