ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்

வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் செல்வகுமார், செயலாளர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-01-23 17:46 GMT

அதில் கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலை ஓரம், பெட்ரோல் பங்குகள், வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்து கொண்டு என்ன குற்றம் என்றே கூறாமல் பொதுவாக போக்குவரத்து விதிமீறல் என்று அபராதம் விதிக்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கி கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைகவசம் அணியவில்லை என்று முரண்பாடான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் சம்பந்தமாக வாகன உரிமையாளர் வாகனத்திற்கான காலாண்டுவரி, தகுதி சான்றிதழ், அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்து. வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதித்து ரசீது வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்