ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி அத்திக்கடை பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பொதக்குடி கமாலியா தெருவை சேர்ந்த அப்துல் வகாபு (வயது70) என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்வகாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.