ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
தஞ்சையில் ஆன்லைன் லாட்டாி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
தஞ்சாவூர்;
தஞ்சை கரந்தை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை ராஜராஜ சோழன் நகர் பகுதியை சேர்ந்த துரைமுருகன் (வயது40) என்பதும், ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.