ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் வளியுறுத்தப்பட்டது.

Update: 2022-12-12 18:18 GMT

வேலூர் கிழக்கு மாவட்டம் அணைக்கட்டு தொகுதி பள்ளி கொண்டா பேரூராட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளிகொண்டா நகர செயலாளர் குமாரவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் நா.சசிகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர தலைவர் சுகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது அன்வர், நகர இளைஞர் அணி தலைவர் செல்வ கணபதி, மாவட்ட பொறுப்பாளர் எம்.சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர், தடா சதாசிவம், மாவட்ட அமைப்பு செயலாளர் அக்னி வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் என்.டி.சண்முகம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன், மாவட்டத் தலைவர் பி.கே.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

கூட்டத்தில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் ஈடுபட்டு தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர் ஆகவே ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய கவர்னர் முன்வர வேண்டும். வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசை முதல்வராக பதவி ஏற்க, ஒரு பூத்துக்கு 12 உறுப்பினர்களை சேர்த்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

பள்ளிகொண்டாவில் இருந்து குடியாத்தம்செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் கால்வாய் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி, கொசு அதிகமாகி, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே உடனடியாக கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் நகர இளைஞரணி தலைவர் செல்வ கணபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்