கரூரில், வெங்காயம் விலை சரிவு

கரூரில், வெங்காயம் விலை சரிவடைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-02-21 18:55 GMT

வெங்காயம்

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்களில் வெங்காயம் மிகவும் அத்தியாவசிய பொருளாக உள்ளது. குறிப்பாக சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் மற்றும் ஓட்டலில் தயாரிக்கப்படும் உணவுகளில் பெரிய வெங்காயம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையானது.

விளைச்சல் அதிகரிப்பு

தற்போது சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக குறைந்துள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தின் புனே மற்றும் அதனை ஒட்டிய மாநிலங்களில் அதிகளவு வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. ேமலும், அங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயத்தின் அளவும் அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அங்கிருந்து வியாபாரிகள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் வெங்காயத்தை வியாபாரிகள் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு சரக்கு வேன்கள் மூலமாக கடைகளுக்கு வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனையாகி வந்த நிலையில் அவை படிப்படியாக குறைந்து கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.33-க்கு விற்பனையாகிறது. அதேபோன்று பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்பனையாகி வருகிறது.

கரூரில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்து உள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்