நெல்லையில் வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை சரிவு

கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சின்ன வெங்காயத்தின் விலை இன்று 50 ரூபாய் வரை குறைந்துள்ளது.;

Update:2023-07-16 18:17 IST

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சின்ன வெங்காயத்தின் விலை இன்று 50 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இதன்படி முதல் தர வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், இரண்டாம் தர வெங்காயம் கிலோ 85 முதல் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Full View

  

Tags:    

மேலும் செய்திகள்