தொழிலாளி காதை கடித்து துப்பியவருக்கு ஓராண்டு சிறை

தொழிலாளி காதை கடித்து துப்பியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Update: 2023-09-23 17:31 GMT

அறந்தாங்கி அருகே வேட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (48). இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. மதிவாணன் அவரது வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன் தான் கொடுத்த பணத்தை தருமாறு மதிவாணனிடம் கேட்டு கொண்டிருந்தார். இதையடுத்து மதிவாணன் மற்றும் அவரது நண்பர் முனுசாமியும் (46) சேர்ந்து முருகனை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்துள்ளனர். அந்த வழியாக சென்ற தொழிலாளியான காந்திராஜன், தகராறு செய்தவர்களை விலக்கி விட்டார். அப்போது ஆத்திரமடைந்த முனுசாமி, காந்திராஜன் காதை கடித்து துப்பி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இது சம்பந்தமாக அறந்தாங்கி கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, முனுசாமிக்குஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் போலீசார் முனுசாமியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்