2 பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
பள்ளி மாணவியை கேலி-கிண்டல் செய்த 2 பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து ஆலங்குளம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
ஆலங்குளம்:
பள்ளி மாணவியை கேலி-கிண்டல் செய்த 2 பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து ஆலங்குளம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கேலி-கிண்டல்
ஆலங்குளம் அருகே ஒரு பள்ளி மாணவியை கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந் தேதி ஆலங்குளம் அருகே கிடாரகுளத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் சக்திவேல், செல்லத்துரை மகன் முத்துக்குமார் ஆகிய இருவரும் கேலி, கிண்டல் செய்தனர்.
இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறைத்தண்டனை
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி ஆனந்தவள்ளி தீர்ப்பு கூறினார். அதில் சக்திவேல், முத்துக்குமார் ஆகிய இருவருக்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.