எண்ணும், எழுத்தும் திட்ட ஓராண்டு நிறைவு விழா

எண்ணும், எழுத்தும் திட்ட ஓராண்டு நிறைவு விழா

Update: 2023-03-20 18:45 GMT

பொள்ளாச்சி

கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில் எண்ணும், எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தொப்பம்பட்டி அரசு பள்ளியில் நேற்று எண்ணும், எழுத்தும்-கற்றலை கொண்டாடுவோம் என்ற விழா நடைபெற்றது. வடக்கு வட்டார கல்வி அலுவலர் யோகேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஆசிரியர் உஷா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணும், எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், வரைபடங்கள், கைவினைப்பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. வகுப்பறைகளில் செயல்பாட்டு களங்கள் அமைக்கப்பட்டன. மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களுடைய செயல்பாடுகளை காண்பித்து எண்ணும், எழுத்தும் திட்டத்தை பற்றி பெற்றோர்களுக்கு விளக்கி கூறினார்கள். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோரஞ்சிதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்