நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டார்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2022-10-29 21:54 GMT

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் துப்பாக்கியுடன் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடிய, விடிய சோதனை

நெல்லை மாநகர பகுதியில் போலீசார் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பழைய குற்றவாளிகள் காரில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காகவும் நெல்லை புதிய பஸ் நிலைய பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனால் அதில் தோட்டா இல்லை. உடனே போலீசார் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர்.

பரபரப்பு

விசாரணையின்போது, அவர் தனது பெயர் பால்ராஜ் என்றும், அந்த பகுதியை சேர்ந்தவர் என்றும், துப்பாக்கியை கீழே கிடந்து எடுத்ததாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி வைத்திருந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதி முழுவதும் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்