வேலூர் கோட்டை வளாகத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

வேலூர் கோட்டை வளாகத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டது.

Update: 2023-05-03 19:50 GMT

=வேலூர் கோட்டை வளாகத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து வேலூர் கோட்டை வளாகத்தில் பிளாஸ்டிகள் கழிவுகள் அகற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நேற்று நடைபெற்றது. மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர் நலஅலுவலர் கணேஷ், மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்கள் சுஷ்மிதா, சவுந்தர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 50 பேர், மாசு கட்டுப்பாடு வாரிய ஊழியர்கள் 10 பேர் என்று மொத்தம் 60 பேர் இணைந்து கோட்டை நுழைவுவாயில், மைதானங்கள், நடைபாதைகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆங்காங்கே வீசி சென்ற சுமார் 1 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்டவற்றை சேகரித்தனர். மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கோட்டையில் உள்ள டீ, குளிர்பான கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். தொடர்ந்து கோட்டை வளாகத்தில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள பகுதி என்று பலகை வைத்தனர்.

இதில் 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன், மாசு கட்டுப்பாடு வாரிய உதவிமேலாளர் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று வேலூர் செல்லியம்மன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்