ஒரே நாளில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு
உடையாமுத்தூர் ஊராட்சியில் ஒரே நாளில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.
கந்திலி ஊராட்சி ஒன்றியம் உடையாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.4.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறை, ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.
மேலும் ஒரே நாளில் ஊராட்சியில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த தூய்மை பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரை தூய்மையான ஊராட்சியாக மாற்றியதற்காக பாராட்டி பரிசு வழங்கினார்.
ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.