இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் காயம்; 2 பேர் மீது வழக்கு
ஓட்டலில் சாப்பிட்டபோது ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் காயம் அடைந்தார். 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆவுடையார்கோவில் மீமிசல் சாலையை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு சாப்பிடவந்த ஸ்ரீராம், தீபக் ஆகியோர் மாணிக்கத்திடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் ஸ்ரீராம், தீபக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.