சாலை விபத்தில் ஒருவர் பலி

கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார்.

Update: 2022-08-22 20:04 GMT
கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் சென்னியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 50). இவர் தனது மனைவி சங்கீதா (48), மகள் தன்ஷிகா(10) ஆகியோருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். மருதாநல்லூர் திப்பிராஜபுரம் இடையே மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நடராஜன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

ஒருவர் பலி; மனைவி-மகள் படுகாயம்

இதில் நிலைகுலைந்து 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு உடனடியாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜன் சிகிச்சை பலனளிக்காமல் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். சங்கீதா மற்றும் தன்ஷிகா இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நாச்சியார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







Tags:    

மேலும் செய்திகள்