குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாதன்கோவில் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. இவருடைய மகன் முருகராஜ் (வயது42). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து முருகராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி முருகராஜை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.