தொழிலாளி கொலையில் ஒருவர் கோர்ட்டில் சரண்
உவரி அருகே தொழிலாளி கொலையில் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
திசையன்விளை:
உவரி அருகே உள்ள கூட்டப்பனையை சேர்ந்தவர் சுபாஷ் என்ற மணி (வயது 26). மீன்பிடி தொழிலாளியான இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த மீனவர் டெல்வர் மகன்கள் ராஜா, பிரவின், தீபன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உவரி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவின் (40) என்பவர் நேற்று தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். நீதிபதி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தலைமறைவாகியுள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்