திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

முன்னீர்பள்ளம் அருகே திருட்டு வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-04 19:00 GMT

முன்னீர்பள்ளம்:

முன்னீர்பள்ளம் அருகே சிங்கிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 31). ரெயில்வே இருவழிப்பாதை மேற்பார்வையாளரான இவர் செங்குளம் ரெயில்நிலையம் அருகே ரெயில்வேக்கு சொந்தமான கேபிள் ஒயர்கள் திருட்டு போய் இருப்பதாக முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுத்தமல்லியை சேர்ந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இந்தநிலையில் இதில் தொடர்புடைய மேலும் ஒருவரான சுத்தமல்லியை சேர்ந்த பூவநாதன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்