டீக்கடைக்காரர் கொலையில் மேலும் ஒருவர் கைது

டீக்கடைக்காரர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-29 21:53 GMT

நாகமலைபுதுக்கோட்டை,

செக்கானூரணி அருகே உள்ள நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). டீக்கடைக்காரர். இவரை ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்தி கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி தலைமையிலான போலீசார் கருப்பையாவை கொலை செய்ததாக சவுந்தரபாண்டி, ரவிச்சந்திரன், அரவிந்த்குமார், அருண்பாண்டி ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உச்சப்பட்டியைச் சேர்ந்த ரஜினிமுருகன் மகன் ஆகாஷ் (23) என்பவரை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்