ஊராட்சி அலுவலகம் சூறையாடல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

காரையூர் ஊராட்சி அலுவலகம் சூறையாடல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-16 23:22 IST

பொன்னமராவதி தாலுகா காரையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் கடந்த 11-ந்தேதி அத்துமீறி நுழைந்து சூறையாடியதாக காரையூர் போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் பழனியப்பன் புகார் கொடுத்தார். அதன் பேரில் காரையூர் போலீசார் அப்பகுதியை சேர்ந்த முருகன் மகன் பாரதிதாசன், பெருமாள் மகன் பழனிச்சாமி, பாண்டியன் மகன் பிச்சைமுத்து, சேது மகன் சரவணன், ரெங்கன் மகன் கண்ணன், ஜெயம் மகன் ஆனந்த் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கண்ணன், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடி வந்த நிலையில், நேற்று காரையூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்