செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்போன் கடை ஊழியர் வினோத்தை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே 18 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அதில் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு முத்து நகரை சேர்ந்த வீராசாமியின் மகன் பப்லு என்ற சத்தியமூர்த்தியை (வயது 24) நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.