1 லட்சம் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

திருவையாறு காவிரி, குடமுருட்டி ஆறுகளில் 1 லட்சம் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-20 21:13 GMT

திருவையாறு;

திருவையாறு காவிரி, குடமுருட்டி ஆறுகளில் 1 லட்சம் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.

நாட்டு இன மீன்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நாட்டு மீன் இனங்களை பாதுகாக்கும் வகையில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் திருவையாறு காவிரி ஆறு மற்றும் நடுக்கடை குடமுருட்டி ஆறுகளில் செயல்படுத்தப்பட்டது.

1 லட்சம் மீன்குஞ்சுகள்

இதன்படி காவிரி ஆற்றில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகளும் குடமுருட்டி ஆற்றில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.நிகழ்ச்சியில் திருவையாறு பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள், கண்டியூர் ஊராட்சி தலைவர் ஜெயபாலன் துணைத் தலைவர் செய்யது முபாரக் , உதவி இயக்குனர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சிவகுமார், மீன்வள ஆய்வாளர் ஆனந்த், நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்