கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-04 17:05 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது தைலாகுளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(வயது 55). இவர் தனது மொபட்டில் சிவகாசி ரோட்டில் சென்றபோது எதிரே வந்த கார் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஜெயப்பிரகாசை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்