ஒரு கிேலா முருங்கைக்காய் ரூ.90-க்கு கொள்முதல்

ஒரு கிேலா முருங்கைக்காய் ரூ.90-க்கு கொள்முதல்

Update: 2022-12-11 11:17 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று 20 விவசாயிகள் 300 கிலோ முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.70 முதல் 75 வரைக்கும், மரம் முருங்கை ரூ.75 முதல் 80 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.90 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

இந்த வாரத்தில் இருந்து வட மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வரத் தொடங்கிவிட்டது என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்