கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி வாலிபர் சாவு

கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2022-08-26 17:05 GMT


திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலையை சேர்ந்த ரங்கநாதன் மகன் சக்திவேல் (வயது 29). இவரது நண்பர்கள் ரவிச்சந்திரன், பிரசாந்த். இவர்கள் 3 பேரும் நேற்று தலைவாசலில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் தேனிமலை நோக்கி சென்றனர்.

கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, நிலைதடுமாறி விபத்தில் சிக்கினர். இதில் கீழே விழுந்தவர்களில் சக்திவேல் மட்டும் எழுந்து சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சக்திவேல் மீது மோதியது. அதில் பரிதாபமாக அவர் இறந்து விட்டார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்