ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு
பரமக்குடியில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து விட்டார்.
பரமக்குடி,
பரமக்குடியில் இருந்து சூடியூர் செல்லும் வழியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்டு முகம் சிதைந்து பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. சிவப்பு கலர் கட்டப்பட்ட அரைக்கை சட்டையும், ஊதா கலரில் வெள்ளை கட்டப்பட்ட கைலியும் அணிந்திருந்தார். இது குறித்து கமுதக்குடி கிராம நிர்வாக அலுவலர் தாமரைக்கனி கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.