லோடு ஆட்டோ மோதி ஒருவர் சாவு

சங்கரன்கோவிலில் லோடு ஆட்டோ மோதி ஒருவர் இறந்தார்;

Update: 2022-09-22 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ராஜபாளையம் ரோட்டில் 45 வயது மதிக்கத்தக்க பேண்ட்-சட்டை அணிந்த ஒருவர் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்று இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்