சின்னசேலம் அருகேதிருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
சின்னசேலம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டாா்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே தொட்டியம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 56). இவரது இளைய மகன் பூபாலன் (31). இவருக்கு விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணத்துக்கு பெண் பார்த்தனர். இதில் நிச்சயம் வரைக்கும் சென்று, திருமணம் திடீரென நின்று போனது.
இதனால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன விரக்தியில் பூபாலன் இருந்துள்ளார். கடந்த 3-ந்தேதி இரவு அவர் மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இரவில் வீட்டிலில் தூங்கிய அவர், 11.30 மணியளவில் வாந்தி எடுத்துள்ளார். அப்போது ஜெயபாலனிடம் தான், விஷத்தை குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பூபாலன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு இறந்து விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.