மகாமாரியம்மன் கோவிலில் திருட்டு வழக்கில் ஒருவர் கைது

மகாமாரியம்மன் கோவிலில் திருட்டு வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-28 18:38 GMT

ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.50,000 மற்றும் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உள்ளிட்டவை திருட்டுபோனது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் ஒருவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அவர் பொன்பரப்பி கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த தமிழ்பாரதி(21) என்பதும், அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. மேலும் சின்னவளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதையும் அவரே போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் தமிழ்பாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்