கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-26 21:43 GMT

தாழையூத்து அருகே உள்ள பண்டாரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (வயது 39). இவர் அவரது கணவரை 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார். தற்போது பேச்சியம்மாள், அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகத்திடம் பேசியதாக கூறப்படுகிறது. இது ஆறுமுகத்தின் மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் (23) என்பவருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக பண்டாரக்குளம் பேச்சிநகரில் உள்ள பேச்சியம்மாள் வீட்டின் முன்பு சுடலைமுத்து என்ற சுரேஷ் (23), மாரிமுத்து, ஆறுமுககனி ஆகியோர் பேச்சியம்மாளை அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேச்சியம்மாள் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஏற்கனவே சுடலைமுத்து என்ற சுரேஷ்யை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை தாழையூத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்