தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலைசிறந்த சான்று ஒண்டிவீரன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலைசிறந்த சான்று ஒண்டிவீரன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-20 07:57 GMT

சென்னை,

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிர் தியாகம் செய்த முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 252-வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலைசிறந்த சான்று ஒண்டிவீரன் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்!

கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலைசிறந்த சான்று என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்