ஒணம் பண்டிகை: கோவை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை
ஒணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 8-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;
கோவை,
ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை கேரளாவில் பிரபலமானது. இந்த பண்டிகை கேரள மாநிலத்தில் பாரம்பரியச் சிறப்புடனும், பெரும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும். கோவை மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய செப்.17-ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.