ஓணம் பண்டிகை - கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

ஓணம் பண்டிகையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-28 15:41 GMT

சென்னை,

ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் 29ஆம் தேதியன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில், நாளை சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட அறிவிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் 29ஆம் தேதி சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில், நாளை ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில், 'ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும்.' என பதிவிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான ஓணம் நல்வாழ்த்துக்கள் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்