பண்பொழி கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
பண்பொழி கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
பண்பொழி பூமிநீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. காலை 7 மணிக்கு கோவில் வளாகத்தில் பல்வேறு மலா்களால் அத்தப்பூ கோலம் இடப்பட்டது. 10.30 மணிக்கு பூமிநீளா சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவு 7.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை பணிநிறைவு பெற்ற ஆசிரியா் ஆறுமுகம், முன்னாள் ராணுவ வீரர் பெரியசாமி, மருந்தாளுநர் முருகையா ஆகியோர் செய்திருந்தனா்.