ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
ஓணம் பண்டிகையையொட்டி அடையகருங்குளம் அன்னை ஜோதி சிறப்பு பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
விக்கிரமசிங்கபுரம்:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அடையகருங்குளம் அன்னை ஜோதி சிறப்பு பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர். அருட்சகோதரிகள் சவுமியா, ராணிட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அன்னை ஜோதி சேவா டிரஸ்டி சந்திரா முன்னிலை வகித்தார். டிரஸ்டி கிறிஸ்டல் கீதா நன்றி கூறினார். அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
* அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி மைதானத்தில் மாணவிகள் பூக்கோலமிட்டு மகிழ்ந்தனர். மேலும் ஒவ்வொரு வகுப்பின் முன்பும் பூக்கோலமிட்டதைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டா ஆகியோரும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.