ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
வால்பாறை அரசு கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து மத பண்டிகைகள், தேசிய விழாக்கள் கொண்டாடுவது வழக்கம். ஓணம் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக கல்லூரியில் ஓணம் விழா நேற்று நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மலையாள மொழி பேசும் மாணவ-மாணவிகளுடன் இணைந்து தமிழக மாணவ-மாணவிகளும் ஓணம் பண்டிகை கொண்டாடினர். விழாவில் மாணவிகள் கேரள பாரம்பரிய உடையணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் பல்வேறு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அத்தப்பூ கோல போட்டி நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.