திருச்செந்தூரில் ரோட்டில் ஆறாக ஓடி வீணான குடிநீர்

திருச்செந்தூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ரோட்டில் குடிநீர் ஆறாக ஓடி வீணானது.;

Update: 2023-08-31 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் ரோட்டோரத்தில் நேற்று அதிகாலை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் கொப்பளித்து கொண்டு ஆறாக ஓடியது. ஆனால் நகராட்சி ஊழியர்கள் எந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டது என்பதை கண்டறியவே சில மணி நேரம் பிடித்தது. நீண்டநேர ஆய்வுக்கு பிறகு குரங்கனியிலிருந்து வரும் குடிநீர் திட்ட மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த குழாய் உடைப்பை நகராட்சியினர் அடைத்து, குடிநீர் வெளியேறுவதை தடுத்தனர். அதற்குள் பல லட்சம் லிட்டர் குடிநீர் ரோட்டில் ஓடி வீணானது. இதனால் ரோட்டின் இருபுறமும் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்