மேலஆத்தூர் கால்வாய் ஓரத்தில் 7அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

மேலஆத்தூர் கால்வாய் ஓரத்தில் 7அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Update: 2022-12-02 18:45 GMT

மேலஆத்தூர்:

மேலஆத்தூர் ஆத்திரங்கால் கால்வாய் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை பார்த்த ஒரு சிறுவன் மேலாத்தூர் பகுதி மக்களிடம் தெரிவித்தான். அங்கு வந்த விவசாயி ராமர் தனிநபராக சென்று லாவகமாக அந்த பாம்பின் தலையை பிடித்து ஒரு சாக்கு பைக்குள் அடைத்து வைத்தார். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்