அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரினர்: சிவகங்கையில் நாளை, அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு வழக்கு - உரிய நடவடிக்கை எடுக்க துைண போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிவகங்கையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரியும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்ட மனு மீதும் உரிய உத்தரவை துைண போலீஸ் சூப்பிரண்டு பிறப்பிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-03-09 20:27 GMT


சிவகங்கையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரியும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்ட மனு மீதும் உரிய உத்தரவை துைண போலீஸ் சூப்பிரண்டு பிறப்பிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 11-ந்தேதி(நாளை) சிவகங்கை கீழ்பதி பகுதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியையும் நடத்த உள்ளோம்.

இதற்காக அனுமதி கேட்டு 2 முறை சிவகங்கை போலீசில் மனு அளித்தோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் அசோகன் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் ஆப்பாட்ட நிகழ்ச்சியை வருகிற 11-ந்தேதி நடத்த உள்ளோம். சிவகங்கை அரண்மனை வாசலில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்காக சிவகங்கைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் அனுமதி கேட்டு மனு அளித்து உள்ளனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது குறித்து விசாரிக்கப்படுகிறது என்றார். பின்னர் இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

துைண போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவு

அதன்படி மீண்டும் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது செந்தில்நாதன் தரப்பில் வக்கீல் பாரதி கண்ணனும், அசோகன் தரப்பில் முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், சிவநேசன் ஆகியோரும் ஆஜரானார்கள்.

முடிவில், தங்களது நிகழ்ச்சிகள் தாமதமாகிவிட்டது என மனுதாரர்கள் அவதிப்படாத வகையில் மனுதாரர்களின் கோரிக்கை குறித்து இன்று (அதாவது நேற்று) மாலை 6 மணிக்குள் சிவகங்கை தாலுகா போலீஸ் துைண போலீஸ் சூப்பிரண்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவு குறித்து நாளை (அதாவது இன்று) கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்