மின்ெரயில் பாதையில் இன்று ஆய்வு

விருதுநகர்-புனலூர் வரை மின்ெரயில் பாதையில் இன்று ஆய்வு நடைபெறுகிறது.

Update: 2023-03-28 19:07 GMT


தென்னக ெரயில்வே முதன்மை தலைமை மின் என்ஜினீயர் ஏ.கே. சித்தார்த்தா புதிதாக மின்மயமாக்கப்பட்ட விருதுநகர்- தென்காசி- செங்கோட்டை- பகவதிபுரம் ெரயில் பாதையில் இன்று எலக்ட்ரிக் லோகோவை பயன்படுத்தி சட்டபூர்வ ஆய்வு மற்றும் வேக சோதனை நடத்துகிறார். மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் அனந்த் மற்றும் தெற்கு ெரயில்வே தலைமையக ெரயில்வே மின்மயமாக்கல் மற்றும் மதுரை கோட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வின் போது உடன் செல்கின்றனர். விருதுநகரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் ஆய்வு ெரயில் மதியம் புனலூர் செல்கிறது. எலக்ட்ரிக் லோகோவை பயன்படுத்தி வேக சோதனை நடைபெறும். எலக்ட்ரிக் லோகோவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு ெரயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு இடமன் சென்றடையும். பகவதிபுரத்தில் இருந்து மாலை 4.35-க்கு புறப்பட்டு வேக சோதனை தொடங்கி இரவு 8.30 மணிக்கு விருதுநகரில் நிறைவடைகிறது. இடமன்-பகவதிபுரம் இடையான மின்மயமாக்கல் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. ேமற்கண்ட தகவலை தென்னக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்