கம்பத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா
கம்பத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கம்பத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அத்திமரத்தில் வடிவமைக்கப்பட்ட விஸ்வகர்ம சிலை கம்பம் போலீஸ் குடியிருப்பு எதிரே உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த சிலைக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் தொழில் வளம் செழிக்க அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் ரத உற்சவ நிகழ்ச்சி நடந்தது.