கம்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கம்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.;

Update: 2022-11-03 18:45 GMT

கம்பம் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் குடியிருப்பை சுற்றி சாலையை ஆக்கிரமித்து காய்கறி, தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கட்டிட ஆய்வாளர் சலீம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த காய்கறி கடைகளை அகற்றினர். இதையடு்த்து மீண்டும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு கம்புகள் மற்றும் கயிறுகளை கட்டி வைத்துள்ளனர். இதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே சாலையோரத்தில் காய்கறி கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மாற்று இடம் தேர்வு செய்து தருமாறு நகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்