கம்பத்தில்தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை

கம்பத்தில் தனியர் நிதி நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-24 18:45 GMT

கம்பம் நந்தகோபால் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 31). இவர் கம்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தலைமை மேலாளராக இருந்து வந்தார். இவர் தனது நிறுவனத்தில் பணம் வரவு, செலவு சம்பந்தமாக சிக்கல் இருப்பதாக மனைவி ஜெனிதாவிடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை சிவக்குமார் வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த ஜெனிதா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது சிவக்குமார் ஊஞ்சல் சங்கிலியால் தூக்கிட்டு பிணமாக கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்